ஆஸ்திரேலியாவில் வீடுகளுக்கு சோலார் பேனல்களாக செயல்படும் புதிய வகை சாளரத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வருட இறுதிக்குள் பொது மக்கள் அவற்றை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நகரில் உள்ள உயரமான கட்டிடங்களில் நிறுவப்பட்டுள்ள இந்த ஜன்னல் தொழில்நுட்பத்தை பொதுமக்கள் பெருமளவில் பயன்படுத்தி எரிசக்தி செலவை ஈடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெர்த்தை தளமாகக் கொண்ட கிளியர் வியூ டெக்னாலஜிஸ் தலைமை நிர்வாகி மார்ட்டின் டீல், அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் சோலார் பேனல்கள் கிடைக்கும் என்று கூறினார்.
இந்த புதிய அறிமுகத்திற்கு பல உற்பத்தியாளர்கள் முன்வந்துள்ளதாகவும், சர்வதேச தேவையும் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு அமெரிக்கா பெரிய சந்தையை உருவாக்கும் என்றும், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தும் அதிக தேவை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெளிவான மெருகூட்டப்பட்ட கண்ணாடியில் உள்ள நானோ துகள்கள் சூரிய ஒளிக் கதிர்களை சாளரத்தின் விளிம்பில் பதிக்கப்பட்ட சிறிய மின்னூட்டப்பட்ட கீற்றுகளுக்கு திருப்பி, அவற்றை மின்சாரமாக மாற்ற பயன்படுகிறது என்று கூறப்படுகிறது.
இந்த சோலார் பேனல்களை பெரிய அளவிலான திட்டத்திற்கு பயன்படுத்தினால், அந்த கட்டிடத்திற்கு 80 சதவீதம் முதல் 95 சதவீதம் வரை மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.