இளமைப் பருவத்தில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குழந்தைப் பருவ வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
குழந்தைகளின் உடல் நிறை குறியீட்டெண், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு மற்றும் புகைபிடித்தல் போன்ற காரணிகள் பிற்கால வாழ்க்கையில் இதய நோய் அபாயத்தை பாதிக்கும் முக்கிய காரணிகளாகக் கூறப்படுகிறது.
அதன்படி, முதுமையில் ஏற்படும் இதயப் பிரச்சனைகள் குழந்தைப் பருவப் பழக்கங்களோடு தொடர்புடையது என ஆஸ்திரேலிய, பின்லாந்து மற்றும் அமெரிக்க கூட்டு ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜமா நெட்வொர்க் ஓப்பன் ஜர்னலில் வெளியிடப்பட்ட பல தசாப்த கால ஆய்வின் தரவு, குழந்தைப் பருவத்தில் ஆபத்தான செயல்களின் முக்கிய விளைவு முதிர்வயதில் மரணம் அல்லது மரணம் இல்லாத மாரடைப்பு என்பதைக் காட்டுகிறது.
இருப்பினும், குழந்தை பருவத்தில் புகைபிடிக்கும் பழக்கம், வயதுவந்த வாழ்க்கையிலும் தொடர்ந்தால் மட்டுமே இதய நோய் அபாயத்தை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
மூன்று நாடுகளிலும் 10,600 க்கும் அதிகமானோர் பங்கேற்ற ஆய்வில், மாரடைப்பு ஏற்படுவதற்கான சராசரி வயது 49 ஆண்டுகள் என்று கண்டறியப்பட்டது.
முதிர்வயதில் முழுமையாக குணப்படுத்த முடியாத நோய்களை குழந்தைப் பருவத்தில் கவனிப்பதன் மூலம் குறைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.