தெற்கு அவுஸ்திரேலியாவில் இரண்டு இலகுரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த இரண்டு விபத்துகளும் இன்று காலை மற்றும் பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அடிலெய்டில் இருந்து வடக்கே 700 கிலோமீட்டர் தொலைவில் ஒரு இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் 22 வயதான விமானி உயிரிழந்துள்ளார்.
விபத்து நடந்தபோது அவர் மட்டும் விமானத்தில் இருந்தார்.
இந்த விபத்து காலை 9.30 மணியளவில் பதிவாகியுள்ளதாகவும், தொலைதூர பகுதிக்கு வருவதற்கு நேரம் எடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், அப்பகுதியில் விவசாய பணிகளுக்கு விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, இன்று பிற்பகல் இலகுரக விமானம் ஒன்று ஈவ்லின் டவுன்ஸ் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் விமானத்தின் பைலட் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவர் நடுத்தர வயதுடையவர் என்றும் அவருக்கு காயங்கள் மோசமாக இருந்தபோதிலும் சீரான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.