தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஓட்டுநர்கள் தங்கள் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கு முன் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் கட்டாயமாக சாலைப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
சாலை விதிகளை அறிந்த அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களை உருவாக்க இந்த சோதனை அவசியம் என்று ராயல் ஆட்டோமொபைல் அசோசியேஷன் பரிந்துரைத்துள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியாவில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த இந்தப் பரிந்துரைகள் முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ராயல் ஆட்டோமொபைல் அசோசியேஷன், 2031ஆம் ஆண்டுக்குள் தெற்கு ஆஸ்திரேலிய சாலைகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கடுமையான காயங்களைக் குறைக்கும் நோக்கில் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பரிந்துரைகளை செய்துள்ளது.
சில சாலைகளில் குறைந்த வேக வரம்புகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் வாகனம் ஓட்டும்போது இயர்போன்கள் அல்லது ஹெட்ஃபோன்களை அணிவதைக் கட்டுப்படுத்தும் திட்டம் ஆகியவை பிற முன்மொழியப்பட்ட நடவடிக்கைகளில் அடங்கும்.
சாரதிகளின் கவனச்சிதறலுக்கு இயர்போன்கள் முக்கியப் பங்காற்றுவதாக அரச அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.