Newsஇத்தாலியில் இலங்கை பெண்ணை பலமுறை கத்தியால் குத்தி கொன்ற கணவர்

இத்தாலியில் இலங்கை பெண்ணை பலமுறை கத்தியால் குத்தி கொன்ற கணவர்

-

இத்தாலியின் ரோம் நகரில் பணிபுரியும் இலங்கைப் பெண் ஒருவரை கடந்த 26ம் திகதி கத்தியால் குத்தி பலத்த காயப்படுத்திய கணவரின் சடலம் அவர்கள் வசித்த வீட்டின் கற்றைகளில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குடும்பத் தகராறு காரணமாக கணவன் மனைவியை பலமுறை கத்தியால் குத்தியதாகவும், பின்னர் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் இத்தாலி கரீபியன் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வாள்வெட்டுக்கு இலக்கான பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் இலங்கையை சேர்ந்த கணவனும் மனைவியும் சில காலமாக இத்தாலியில் பணிபுரிந்து வருவதுடன் அவர்களுக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

கணவனால் தாக்கப்பட்ட பெண் காயங்களுடன் மருத்துவ உதவிக்காக அலறியடித்துக்கொண்டு வீதியில் ஓடுவதைக் கண்ட இத்தாலியர்கள் குழு உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்நாட்டு 118 ஆம்புலன்ஸ் சேவை மூலம் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இத்தாலிய கரீபியன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

Latest news

NSW-வில் மின் ஸ்கூட்டரில் பயணித்த நபர் மீது மோதிய கார் – ஒருவர் மரணம்

நியூ சவுத் வேல்ஸ் Illawarra பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி வழியாக மின்-ஸ்கூட்டரில் பயணித்த ஒருவர், கார் மோதியதில் விழுந்து உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை 7...

சர்ச்சைக்குரிய வரிவிதிப்பு நிறைவேற்றம் – போராட்டம் நடத்த உள்ள தீயணைப்பு வீரர்கள்

அதிகாலையில் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சேவை வரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, கோபமடைந்த விவசாயிகளும் CFA தன்னார்வலர்களும் நாடாளுமன்றத்தின் முன் போராட்டம் நடத்துவார்கள் என...

விவசாயிகளுக்கு $15.9 மில்லியன் உதவியை அறிவித்துள்ள விக்டோரியா அரசு 

நீண்டகால வறட்சியை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு விக்டோரியன் அரசு 15.9 மில்லியன் டாலர் நிதி உதவியை அறிவித்துள்ளது. இந்த நிதி, முன்னர் அரசாங்க நிவாரணம் பெற்ற 11 நகரங்களுடன்...

போலி ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் போலி ஆவணங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக முன்னணி வழக்கறிஞர்களின் பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. "போலி ID" என்ற சொல் ஒவ்வொரு மாநிலத்திலும் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாகவும், போலி IDகள்...

குயின்ஸ்லாந்தில் ராட்சத காற்றாலை பகுதியை ஏற்றிச் சென்ற லாரி பாலத்தில் மோதி விபத்து

பிரிஸ்பேர்ணுக்கு வடக்கே உள்ள ஒரு பெரிய நெடுஞ்சாலையில் ஒரு பாலத்தின் கீழ் சிக்கிய காற்றாலை விசையாழியின் ஒரு பெரிய பகுதியை அகற்ற அதிகாரிகள் நேற்று இரவு...

விவசாயிகளுக்கு $15.9 மில்லியன் உதவியை அறிவித்துள்ள விக்டோரியா அரசு 

நீண்டகால வறட்சியை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு விக்டோரியன் அரசு 15.9 மில்லியன் டாலர் நிதி உதவியை அறிவித்துள்ளது. இந்த நிதி, முன்னர் அரசாங்க நிவாரணம் பெற்ற 11 நகரங்களுடன்...