News12,000 கோடி கடனாளியாக இறந்த மைக்கேல் ஜக்சன் – சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள...

12,000 கோடி கடனாளியாக இறந்த மைக்கேல் ஜக்சன் – சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அறிக்கை

-

பிரபல பொப் இசை சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஜக்சன் இறக்கும்போது ரூ12,000 கோடி வரை கடன் நெருக்கடியில் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல பொப் இசைக்கலைஞரான மைக்கேல் ஜக்சன் தன்னுடைய 50-வது வயதில், கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 25ஆம் திகதி உயிரிழந்தார். இதுவரை 13 கிராமி விருதுகள் பெற்றுள்ள மைக்கேல் ஜேக்சனின் பாடல்கள் உலகமெங்கிலும் புகழ்பெற்றவை. இந்த நிலையில், அவர் இறக்கும் போது கடுமையான நிதி நெருக்கடியில் இருந்ததாக அவருடைய எஸ்டேட் நிர்வாகிகள் அது குறித்த விவரங்களை கடந்த ஜூன் 21 அன்று தாக்கல் செய்துள்ளனர்.

லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்ட சொத்து விவரங்களில் மைக்கேல் ஜக்சனுக்கு இறக்கும்போது ரூ.12,000 கோடி வரை (இலங்கை மதிப்பில்) கடன் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இறப்பதற்கு முன்னர் ‘திஸ் இஸ் இட்’ எனப்படும் உலக நாடுகளில் நடக்கவிருந்த இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க பல நாட்கள் பயிற்சியில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தார் மைக்கேல் ஜக்சன். அதற்காக பல புதிய பாடல்களையும் எழுதி வைத்திருந்தார். ஆனால், ஒருபுறம் அவருக்கும் நிதி நெருக்கடி பெரிய அளவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மைக்கேல் ஜக்சனின் ஆடம்பர வாழ்க்கை முறையால் அவரது கடன் அளவு ஆண்டுக்கு ரூ.750 கோடி வரை அதிகரித்தது என்றும், அவர் ஆபரணங்களுக்காக அதிகளவு செலவிட்டதாகவும், தவறான நிதி மேலாண்மையால் இத்தகைய நெருக்கடியில் சிக்கியதாகவும் கணக்காளர் வில்லியம் ஒக்கர்மேன் ஜக்சனின் இறப்பு விசாரணையின் போது தெரிவித்தார்.

1993-ம் ஆண்டு முதலே மைக்கேல் ஜக்சன் கடன் பிரச்சினைகளை சந்தித்து வந்துள்ளார். கடந்த 2001 முதல் 2009ஆம் ஆண்டு வரை அவருக்கு ரூ.4200 கோடி கடன் இருந்ததாகவும், அதற்கான வட்டியும் அவருக்கு பெரிய சுமையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஜக்சன் இறந்தபோதும் அவரது கடன் நெருக்கடிகள் குறையவில்லை. இறப்பதற்கு முன் அவர் பங்கேற்பதாக இருந்த இசை நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டதால் விளம்பரதாரர்களுக்கு செலுத்த வேண்டிய சுமார் ரூ.1100 கோடி வரையிலான கடன் தோகை அவரது எஸ்டேட்டின் மேல் விழுந்துள்ளது.

கடன்களை அடைக்க ஜக்சனின் சொத்துகளில் இருந்து வருமானம் கிடைக்கும் என்பதில் குறைந்த அளவே நம்பிக்கை உள்ளதாக சமீபத்திய விசாரணை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

கஞ்சா நிறைந்த மருந்துகள் உயிருக்கு ஆபத்தானவை!

ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் (AMA) மற்றும் ஆஸ்திரேலிய மருந்தகக் குழு ஆகியவை 98% க்கும் அதிகமான THC (Tetrahydrocannabinol) உள்ளடக்கம் கொண்ட கஞ்சா அடிப்படையிலான மருந்துகளின்...

சமீபத்திய தரவரிசையில் ஆஸ்திரேலியா பாஸ்போர்ட் எந்த இடத்தில் உள்ளது?

உலக பாஸ்போர்ட் தரவரிசையில் இந்த ஆண்டு ஆஸ்திரேலிய பாஸ்போர்ட் மேலும் சரிந்துள்ளது. 2025 ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி, ஆஸ்திரேலியர்கள் 185 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். இதன் மூலம்...

உலகளாவிய சவாலாக உருவெடுத்துள்ள Antibiotics சிகிச்சைகள்

பாக்டீரியா நோய்களுக்கு எதிரான Antibiotics சிகிச்சைகளுக்கு எதிர்ப்பு உலகளவில் வேகமாக அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. இதனை உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. உலகளவில் மக்களில் பொதுவான நிலைமைகளை ஏற்படுத்தும்...

உலகப் பட்டத்தை வென்ற மெல்பேர்ண் நகரம்

ஹாங்காங்கில் நடைபெற்ற 2025 உலக பயண விருதுகளில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் ஒரு முக்கிய விருதை வென்றுள்ளது.Oceania’s Leading City Destination for 2025-இற்கான சிறந்த விருதை...

உலகளாவிய சவாலாக உருவெடுத்துள்ள Antibiotics சிகிச்சைகள்

பாக்டீரியா நோய்களுக்கு எதிரான Antibiotics சிகிச்சைகளுக்கு எதிர்ப்பு உலகளவில் வேகமாக அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. இதனை உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. உலகளவில் மக்களில் பொதுவான நிலைமைகளை ஏற்படுத்தும்...

உலகப் பட்டத்தை வென்ற மெல்பேர்ண் நகரம்

ஹாங்காங்கில் நடைபெற்ற 2025 உலக பயண விருதுகளில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் ஒரு முக்கிய விருதை வென்றுள்ளது.Oceania’s Leading City Destination for 2025-இற்கான சிறந்த விருதை...