2024 ஆம் ஆண்டில் பதிவாகியிருந்த மிகக் குளிரான இரவை இந்த வாரம் காணும் என்று மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நாளை (03) விக்டோரியா மற்றும் தஸ்மேனியாவில் இரவு மிகவும் குளிராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ் ஆகிய மாநிலங்களும் பாதிக்கப்படும் என்றும், பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் முழுவதும் சிட்னி மற்றும் பிரிஸ்பேனில் அவ்வப்போது 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, சிட்னி வாசிகள் இந்த வாரம் முழுவதும் குளிரான காலநிலையை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றும், கனமழை குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நேற்று (01) காலை சிட்னி நகரில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 6.4 டிகிரி செல்சியஸை எட்டியது.
மெல்போர்னில் வெப்பநிலை முறையே 4 டிகிரி செல்சியஸ், 2 டிகிரி செல்சியஸ் மற்றும் 3 டிகிரி செல்சியஸ் என்ற குறைந்தபட்ச மதிப்புகளில் இன்றும் வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.