Newsஆஸ்திரேலியாவில் வேலை இல்லாமல் ஆண்டுக்கு $60,000 சம்பாதிப்பது எப்படி?

ஆஸ்திரேலியாவில் வேலை இல்லாமல் ஆண்டுக்கு $60,000 சம்பாதிப்பது எப்படி?

-

சில ஆஸ்திரேலியர்கள் வேலை செய்யாமல் வீட்டில் இருந்தபடியே ஆண்டுக்கு $60,000க்கு மேல் சம்பாதிக்க முடிந்தது என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடந்த நிதியாண்டில் சில சொத்து உரிமையாளர்கள் ஆண்டுக்கு சராசரியாக $59,000 அதிகமாகச் சம்பாதித்ததாக New CoreLogic தரவு காட்டுகிறது, ஏனெனில் வீட்டு விலைகள் 8 சதவீதம் அதிகரித்து $793,883 ஆக இருந்தது.

2022-2023 நிதியாண்டில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்திய நேரத்தில், சொத்து உரிமையாளர்களின் இந்த வருமானம் 2 சதவீதம் சரிவைக் காட்டியது.

ஆனால் CoreLogic இன் ஆராய்ச்சி இயக்குனர் டிம் லாலெஸ், 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.35 சதவீத வட்டி விகிதத்தில் இருந்தாலும், தற்போதுள்ள வீட்டு விலைகள் வீட்டுப் பற்றாக்குறையால் உயர வாய்ப்புள்ளது என்று சுட்டிக்காட்டுகிறார்.

வழங்கல் மற்றும் தேவை சமமாக இருக்கும் வரை வீடுகளின் விலைகள் மேலும் உச்சத்தை பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வீட்டுப் பற்றாக்குறை தொடர்வதால், இந்த நிதியாண்டில் வீட்டு விலைகள் சுமார் 5 சதவீதம் அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலைமையால் சொத்து உரிமையாளர்கள் உழைக்காமல் தங்கள் சொத்தை வாடகைக்கு விடுவதன் மூலம் வீட்டில் இருந்தே அதிக வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Latest news

வீட்டு வாடகை விலைகள் அதிகரிப்பால் குறைந்துவரும் மலிவு விலை வீடுகள்

கடந்த 12 மாதங்களில், சில பகுதிகளில் வீட்டு வாடகை விலைகள் அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலியாவில் பொதுவாக மலிவு விலை வீடுகளின் விலைகள் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட...

நேற்றிரவு விக்டோரியா வானில் தென்பட்ட வெளிச்சம்

விக்டோரியா மாகாணத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு வானில் தென்பட்ட பெரிய வெளிச்சம் குறித்த ஆர்வம் அம்மாநில மக்களிடையே எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு சிறுகோளின் பாகம் என்று நம்பப்படும்...

மனிதர்களுக்கான பறவைக் காய்ச்சலுக்கான தடுப்பூசி அறிமுகம்!

உலகிலேயே முதன்முறையாக, விலங்குகளுடன் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பறவைக் காய்ச்சல் தடுப்பூசியை அடுத்த வாரம் முதல் வழங்க ஃபின்லாந்து திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், தொடர்புடைய தடுப்பூசியை வழங்கும் உலகின் முதல்...

மெல்போர்ன் ரயில் நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்

மெல்போர்ன் ரிச்மண்ட் ரயில் நிலையத்தில் இனந்தெரியாத ஒருவரால் ரயில் தண்டவாளத்தில் தள்ளப்பட்ட பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சேவை குழுக்கள் நேற்று மாலை 4...