Sydneyசிட்னி பல்கலைக்கழகத்தில் கத்திக்குத்து சம்பவம்

சிட்னி பல்கலைக்கழகத்தில் கத்திக்குத்து சம்பவம்

-

சிட்னி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் 14 வயது சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை 8.30 மணியளவில் வெஸ்டர்ன் அவென்யூவில் கத்திக் குத்து தாக்குதல் நடந்ததாக வந்த தகவலை அடுத்து காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ்கள் சென்றன.

தாக்குதலுக்கு உள்ளான 22 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயங்களுடன் பிரின்ஸ் அல்பிரட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைக்கு உதவி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞனும் சந்தேகநபரும் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை என்பதுடன் இந்த தாக்குதலுக்கான சரியான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

இச்சம்பவத்தினால் பொதுமக்களுக்கு இனி எவ்வித ஆபத்தும் ஏற்படாது எனவும், பாதுகாப்பு நடவடிக்கையாக பல்கலைக்கழக வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்த இளைஞன் சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவரா அல்லது அவரது அடையாளம் குறித்த தகவல்களை இதுவரை பொலிஸார் வெளியிடவில்லை.

Latest news

உலகின் சிறந்த நீதிபதி காலமானார்

"உலகின் சிறந்த நீதிபதி" என்று அழைக்கப்படும் அமெரிக்க நீதிபதி Frank Caprio காலமானார். கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் தனது 88ஆவது வயதில் இறந்தார். அமெரிக்காவின் Rhode தீவில்...

வெடிக்கும் நட்சத்திரத்தின் உட்புறத்தை முதன்முதலில் பார்த்த விஞ்ஞானிகள்

வெடிக்கும் நட்சத்திரத்தின் (supernova) உட்புறத்தைக் கவனிப்பதில் விஞ்ஞானிகள் முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளனர். நட்சத்திரங்கள் எரிபொருள் தீர்ந்து போகும் வரை மில்லியன் கணக்கான முதல் டிரில்லியன் ஆண்டுகள்...

ஆஸ்திரேலியாவில் மாறிவரும் Rewards மற்றும் Loyalty திட்டங்கள்

ஆஸ்திரேலியாவின் பிரபலமான Rewards மற்றும் Loyalty திட்டங்கள் மாறி வருகின்றன. ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் காரணமாக, Qantas மற்றும் Virgin போன்ற பிரபலமான விமான நிறுவனங்கள்...

விற்பனைக்கு வர உள்ள நீண்டகாலமாக இயங்கும் ஆஸ்திரேலிய பேக்கரி சங்கிலி

ஆஸ்திரேலிய உணவுத் துறையில் ஒரு முக்கிய நிறுவனம், கடந்த நிதியாண்டில் அதன் தாய் நிறுவனத்திற்கு 12 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்திய பின்னர் விற்பனைக்கு...

NSW-வில் 83 வயது முதியவரை தற்செயலாக கத்தியால் குத்திய நபர்

நியூ சவுத் வேல்ஸின் ஹண்டர் பகுதியில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டர் கார் நிறுத்துமிடத்தில் 83 வயது முதியவர் மீது "முட்டாள்தனமான" மற்றும் "தற்செயலாக" ஒருவர்...

ஆஸ்திரேலியாவில் மாறிவரும் Rewards மற்றும் Loyalty திட்டங்கள்

ஆஸ்திரேலியாவின் பிரபலமான Rewards மற்றும் Loyalty திட்டங்கள் மாறி வருகின்றன. ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் காரணமாக, Qantas மற்றும் Virgin போன்ற பிரபலமான விமான நிறுவனங்கள்...