Melbourneமெல்போர்னில் 2 இளம் பெண்களை சாலையில் விட்டு சென்ற 4 இளைஞர்கள்

மெல்போர்னில் 2 இளம் பெண்களை சாலையில் விட்டு சென்ற 4 இளைஞர்கள்

-

மெல்போர்னில் திருடப்பட்ட கார் மற்றுமொரு காருடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய திருடப்பட்ட காரை எடுத்துச் சென்ற சிறார்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக விக்டோரியா பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை 7 மணியளவில் மெல்பேர்ன் பர்வூட் பகுதியில் இரண்டு கார்களும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் திருடப்பட்ட காருடன் மோதிய மற்றைய காரின் சாரதி என்பதுடன் அவர் யார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை.

திருடப்பட்டதாகக் கூறப்படும் காரில் இருந்த நான்கு இளைஞர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும், சம்பவ இடத்தில் 15 வயதுடைய இரு சிறுமிகள் கைது செய்யப்பட்டதாகவும் விக்டோரியா பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு சிறுமிகளும் போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருடப்பட்ட காரில் வந்தவர்கள் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதே விபத்துக்கு காரணம் என பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...