வட இந்தியாவில் மத விழாவின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 60 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்ட பேரழிவில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் மருத்துவ அதிகாரி உமேஷ் திரிபாதி தெரிவித்தார்.
போலே பாபா என்ற மதத் தலைவர் ஏற்பாடு செய்திருந்த சமய நிகழ்வை முடித்துக்கொண்டு நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் வெளியேறும் போது இந்த நெரிசல் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 5000 பேர் பங்கேற்கும் இந்த நிகழ்வில் 15,000க்கும் மேற்பட்டோர் கூடியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிகழ்வு முடிந்த உடனேயே கூட்டம் வெளியேறத் தயாரானதால் நெரிசல் ஏற்பட்டதாக உயிர் பிழைத்த ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இருந்து சுமார் 350 கி.மீ தொலைவில் உள்ள கிராமத்தில் இந்த நெரிசல் ஏற்பட்டது.
இந்தியாவில் மதப் பண்டிகைகளின் போது இதுபோன்ற கூட்ட நெரிசல்கள் ஏற்படுவது சகஜம் என்றும், இதற்கு முக்கியக் காரணம் ஒரு சிறிய பகுதியில் அதிக அளவில் மக்கள் கூடுவதுதான் என்றும் வெளிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.