மாட்ரிட்டில் இருந்து உருகுவே நோக்கி பயணித்த விமானம் கடுமையான காற்று கொந்தளிப்பில் சிக்கியதில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தையடுத்து ஸ்பெயின் விமான நிறுவனமான ஏர் யூரோபாவிற்கு சொந்தமான போயிங் 787 ரக விமானம் பிரேசிலில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானிகள் விமானத்தை சாதாரண முறையில் தரையிறக்கியுள்ளதாகவும், கொந்தளிப்பில் சிக்கி பல்வேறு காயங்களுக்கு உள்ளானவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
விபத்தின் போது, விமானத்தில் 339 பணியாளர்கள் இருந்தனர்.
விமானம் கொந்தளிப்பால் தாக்கப்பட்டபோது காயமடைந்த 30 பயணிகளில் பெரும்பாலானோர் சீட் பெல்ட் அணியவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மாட்ரிட்டில் இருந்து மற்றொரு விமானம் பிரேசிலில் சிக்கித் தவிக்கும் பயணிகளை உருகுவேக்கு அழைத்துச் செல்லும் என்று ஸ்பானிஷ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.