ஆஸ்திரேலியாவில் உள்ள ஃபெடரல் போலீசில் பதிவாகும் ஒவ்வொரு 5 பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் 3 குடும்ப வன்முறை புகார்கள் தொடர்பானவை என தெரியவந்துள்ளது.
இந்த நாட்டில் வாழும் போது ஏதேனும் பாலியல் வன்முறைகள் ஏற்பட்டால், குடும்ப வன்முறை ஆலோசனை சேவையை 1800 737 737 அல்லது 131114 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
பதிவாகும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பாலியல் வன்கொடுமை மற்றும் குடும்ப வன்முறை குறித்து தெரிவிக்கவும், தேவையான உதவிகளை வழங்கவும் மாநிலம்தோறும் பிராந்திய ஆலோசனை சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளன.
விக்டோரியாவில் யாரேனும் சமீபத்தில் பாலியல் வன்கொடுமை அல்லது குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் 1800 806 292 என்ற எண்ணை அழைத்து உதவி பெறலாம்.
இந்த சேவையின் மூலம் மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை தொடர் சேவைகளை பெற முடியும் என்பது இதன் சிறப்பு.
விக்டோரியர்கள் வார இறுதி நாட்களிலும் பொது விடுமுறை நாட்களிலும் சேவையில் இணைக்க முடியும்.