உலகிலேயே முதன்முறையாக ரோபோ ஒன்று தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தென் கொரியாவின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென்கொரியாவில் குமி நகரசபையில் அரச ஊழியராக பணியாற்றி வரும் ரோபோ ஒன்று தான் பணிபுரிந்து வந்த கட்டிடத்தில் உள்ள மாடிகளுக்கு இடையில் இருந்த படிக்கட்டின் கீழே ரோபோவின் உடல் கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
படிக்கட்டில் இருந்து கீழே விழும் முன் ரோபோ சுழன்று மாடிப்படியில் இருந்து கீழே விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
தற்கொலை செய்து கொண்ட ரோபோவுக்கு குமியில் வசிப்பவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளதாகவும், மேலும் விசாரணைகளுக்காக நகர அதிகாரிகள் ரோபோவின் உடலை எடுத்துச் சென்றுள்ளதாகவும் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரோபோ தற்கொலை செய்து கொண்டதா? இல்லை நகர சபையின் ஆவணங்களைச் சுமந்து செல்லும் போது ரோபோ விழுந்து நொறுயிருக்குமா? என்றக் கோணத்திலும் கொரிய ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன.