Newsசிறுமியின் கோரிக்கைக்கு செவிசாய்த்த எலான் மஸ்க்

சிறுமியின் கோரிக்கைக்கு செவிசாய்த்த எலான் மஸ்க்

-

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் இந்த நிறுவனம் முன்னிலையில் உள்ளது.

சீனாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் டெஸ்லா காரில் உள்ள ஸ்கிரீனில் தான் விரும்பியதை படமாக வரைந்துள்ளார். அப்போது திடீர் திடீரென வரைந்த படங்கள் காணாமல் போகின்றன .. இதனால் அந்த சிறுமி கவலை அடைந்தார். அத்துடன் இது ஒரு பிழை. இதை டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என விரும்பினார்.

தன்னுடைய செயலை ஒரு வீடியோவை எடுத்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு எலாஸ் மஸ்க் டேச் செய்துள்ளார். அதில் ஹலோ மிஸ்டர் மஸ்க், நான் சீனாவின் மோலியில் உள்ளேன். என்னுடைய கேள்வி உங்களுடைய கார் பற்றியது. நான் படம் வரையும்போது, சில நேரங்களில் லைன் இது போன்று (வீடியோவை காட்டி) மறைந்து விடுகிறது. நீங்கள் இதை பார்க்கிறீர்கள் அல்லவா? இதை சரி செய்ய முடியுமா? நன்றி” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதை கவனித்த எலான் மஸ்க் “நிச்சயமாக” என பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் வலைப்பக்கத்தில் கருத்து விவாதங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.

நன்றி தமிழன்

Latest news

பெண்களின் இலட்சியங்களுக்கு எல்லை இருக்கக்கூடாது – பிரிட்டனின் முதல் பெண் நிதியமைச்சர்

பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சி மொத்தமுள்ள 650 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களையும் தாண்டி 408 இடங்களில் வெற்றி பெற்று,...

கழிப்பறைக்கு விரைந்து சென்ற நபருக்கு $2764 அபராதம் விதிப்பு

அனுமதிக்கப்பட்ட வேக வரம்பிற்கு மேல் காரை ஓட்டிய நபருக்கு நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை $2764 அபராதம் விதித்துள்ளது. குறித்த நபர் தனது காரை மணிக்கு 60...

1500 ஆண்டுகள் பழமையான மோசஸூடன் தொடர்புடைய நினைவுச்சின்னம் கண்டெடுப்பு

தெற்கு ஆஸ்திரியாவில் 1,500 ஆண்டுகள் பழமையான பளிங்குகளாலான தந்தப் பெட்டியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இன்ஸ்ப்ரூக் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு தெற்கு ஆஸ்திரியாவில் உள்ள ஒரு தேவாலயத்தில்...

விக்டோரியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போன பெண்

விக்டோரியாவின் பாரெட்டில் இருந்து ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போன பெண்ணைக் கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். கடந்த மே மாதம் 30ஆம் திகதி மதியம்...

விக்டோரியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போன பெண்

விக்டோரியாவின் பாரெட்டில் இருந்து ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போன பெண்ணைக் கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். கடந்த மே மாதம் 30ஆம் திகதி மதியம்...

ஆஸ்திரேலியாவில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஆஸ்திரேலியாவின் தலைநகரங்களில் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை குறைந்தது 15 நிமிடங்களுக்கு ஒருமுறை இயங்க வேண்டும்...