வடக்கு பிரதேசத்தின் தொலைதூரப் பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்றபோது காணாமல் போன சிறுமியின் உடல் உறுப்புகள் என சந்தேகிக்கப்படும் பல உடல் உறுப்புகளை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்கிழமை மாலை 5.30 மணியளவில் டார்வினில் இருந்து 350 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மேங்கோ க்ரீக்கில் நீராடச் சென்ற போது சிறுமி காணாமல் போனதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது அவர் குடும்ப உறுப்பினர்களுடன் இருந்ததாக கூறப்படுகிறது.
சிறுமி காணாமல் போனதையடுத்து, தங்கள் மகள் முதலையால் தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் அடைந்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்த காணாமல் போன சம்பவம் சிறுமியின் குடும்பத்துக்கும், ஒட்டுமொத்த சமூகத்துக்கும் உண்மையிலேயே சோகமான சம்பவம் என்று போலீசார் தெரிவித்தனர்.
காணாமல் போன சிறுமியின் அடையாளத்தை தேடுவதற்கு படகு மற்றும் ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டதுடன், முதலை முகாமைத்துவ அதிகாரிகள் குழுவுடன் பொலிஸாரும் இந்த நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர்.
ஆனால் சிறுமி காணாமல் போன இடத்திற்கு அருகில் முதலை எதுவும் தென்படவில்லை என்று கூறப்படுகிறது.