Perthபூனைகள் மற்றும் நாய்களுக்கு தடை விதித்துள்ள பெர்த் கவுன்சில்

பூனைகள் மற்றும் நாய்களுக்கு தடை விதித்துள்ள பெர்த் கவுன்சில்

-

பெர்த்தில் உள்ள ஒரு கவுன்சில் பொது இடங்களில் பூனைகளை தடை செய்ய முடிவு செய்துள்ளது மற்றும் பிரிஸ்பேனில் நாய்களை உணவகத்திற்குள் கொண்டு வர தடை விதிக்கும் சம்பவம் பதிவாகியுள்ளது.

தெற்கு பெர்த் நகர சபையானது, அப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் காரணமாக பல பொது இடங்களில் பூனைகளை தடை செய்ய முடிவு செய்துள்ளது.

MacDougall Park, Manning Bushland, Millers Pool, Sir James Mitchell Park, Curtin Primary Schools மற்றும் Collier Park Golf Course உட்பட 27 பகுதிகளில் இருந்து பூனைகளை தடை செய்ய புதிய மசோதா முன்மொழிகிறது.

குறித்த பகுதிகள் வன விலங்குகள் பதற்றமான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள பூனைகள் புதிய விதிகளின் கீழ் பிடிக்கப்பட்டு அகற்றப்படும் எனவும் சபை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட விதிகளின் கீழ், தவறு செய்யும் பூனை உரிமையாளர்களுக்கு ஒரு நாளைக்கு $500 முதல் $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக இந்தப் புதிய சட்டங்களும் பகிரங்கப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், பிரிஸ்பேனில் உள்ள ஒரு உணவகத்திற்குள் செல்ல நாய்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது உள்ளூர் செல்லப்பிராணி உரிமையாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த உணவகம், இது தொடர்பான குறிப்பொன்றை தமது ஸ்தாபனத்தின் முன் கதவில் வைத்து செல்ல நாய் உரிமையாளர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

9 வருடங்களுக்கு மேலாக நாய் உரிமையாளர்கள் தங்கள் உணவகத்திற்குள் விலங்குகளை அழைத்து வர அனுமதித்துள்ள போதிலும், ஊழியர் ஒருவர் நாயைத் தொட்டு கைகளை கழுவாதது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமது நிறுவனம் தொடர்பாக சபை அதிகாரிகளுக்கு கிடைத்த அநாமதேய முறைப்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் வருந்தத்தக்கது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

இறக்குமதி தடைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் 10 மில்லியனுக்கும் அதிகமான வேப்கள் பறிமுதல்

கடந்த ஆண்டு தொடக்கத்தில் தடை செய்யப்பட்டதிலிருந்து 10 மில்லியனுக்கும் அதிகமான வேப்களை பறிமுதல் செய்துள்ளதாக சிகிச்சை பொருட்கள் ஆணையம் மற்றும் ஆஸ்திரேலிய எல்லைப் படை (ABF)...

பாகிஸ்தானில் அரங்கேறிய இராமாயணம்!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சி நகரில், இராமாயண நாடகம் அரங்கேற்றப்பட்டது. இதற்கு அங்கு வரவேற்பு கிடைத்துள்ளது. மௌஜ் என்ற நாடக குழுவினர் செயற்கை நுண்ணறிவின் உதவியுன்...

இனிப்பு பானங்களுக்கு சர்க்கரை வரி விதிக்க வேண்டும் என கோரிக்கை

அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் Type 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த சோடாக்கள், cordials, energy drinks மற்றும் பழச்சாறுகள் மீது புதிய வரி...

ஆஸ்திரேலியாவிற்கு வரவுள்ள பிரபல அமெரிக்க துரித உணவு உணவகம்

பிரபல அமெரிக்க துரித உணவு பிராண்டான Auntie Anne’s அதன் முதல் ஆஸ்திரேலிய உரிமையாளர் கடையைத் திறக்க உள்ளது. இது ஜூலை 26 அன்று Westfield Parramatta...

மெல்பேர்ண் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதக் குவியல்

மெல்பேர்ணின் தென்கிழக்கில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 3D printed ஆயுதங்கள், வெடிமருந்துகள், பணம் மற்றும் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான துப்பாக்கி பரிவர்த்தனை தொடர்பான...

ஆன்லைனில் மருந்துச் சீட்டுகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது விசாரணை

எடை இழப்புக்கான மருந்துகளை ஆன்லைனில் விற்பனை செய்யும் நிறுவனங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கேள்வித்தாளை நிரப்பவும், சில புகைப்படங்களை அனுப்பவும், தொலைபேசி மூலம் மருத்துவரைத்...