ஐக்கிய இராச்சிய பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி அமோக வெற்றி பெற்றதையடுத்து புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பதவியேற்க உள்ளார்.
14 ஆண்டுகளில் முதன்முறையாக கன்சர்வேடிவ் கட்சியை தோற்கடித்து தொழிற்கட்சி ஆட்சியை கைப்பற்றியது ஒரு மாபெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
பிற்பகல் 2 மணியளவில் அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களை தொழிலாளர் கட்சி பெற்றுள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தோல்விக்கு தாம் பொறுப்பேற்பதாக பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தொழிலாளர் கட்சிக்கு வாக்களித்த மக்களை ஈர்ப்பதே தனது அடுத்த இலக்கு என சீர்திருத்தக் கட்சியின் தலைவர் நைகல் ஃபரேஜ் தெரிவித்துள்ளார்.
தனது தொகுதியான கிளாக்டன் வெற்றி பெற்ற பின்னர், தொழிலாளர் கட்சி பெற்ற வாக்குகள் பெரிய அளவில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்தேர்தலில் சீர்திருத்தக் கட்சி பல இடங்களில் வெற்றி பெறும் என்பதுடன், கணிசமான சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.