அனுமதிக்கப்பட்ட வேக வரம்பிற்கு மேல் காரை ஓட்டிய நபருக்கு நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை $2764 அபராதம் விதித்துள்ளது.
குறித்த நபர் தனது காரை மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் உள்ள பகுதியில் வேக வரம்பையும் மீறி 111 கிலோமீற்றர் வேகத்தில் ஓட்டிச் சென்றதாக பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பொலிஸாரின் விசாரணையின் போது, கழிவறைக்கு செல்ல வேண்டியிருந்ததால் வேகமாக செல்ல நேரிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை ரோந்து குழு கடந்த ஜூன் 28 அன்று பர்வூட் சாலையில் வேக வரம்பை மீறுவதைக் கண்டறிந்தது.
இரவு 11.20 மணியளவில், போலீசார் சைகை காட்டி காரை நிறுத்திய பின், தான் கழிவறைக்கு செல்ல வேண்டும் என போலீசாரிடம் கூறியுள்ளார்.
ஆனால் போலீசார் அதை ஒரு சாக்காக ஏற்கவில்லை, அவருக்கு $2,764 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், இவரின் சாரதி அனுமதிப்பத்திரமும் ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.