Newsகாஸா பாடசாலை மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் இராணுவம் - குழந்தைகள்...

காஸா பாடசாலை மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் இராணுவம் – குழந்தைகள் உட்பட 16 பேர் பலி

-

மத்திய காஸாவின் நுசீரத்தில் அமைந்துள்ள அல்-ஜாவ்னி பாடசாலை மீது நேற்று சனிக்கிழமை இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதல்களில் 16 பேர் கொல்லப்பட்டதோடு 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

காஸாவில் போர் காரணமாக இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீன குடும்பங்கள், ஐ.நா. அமைப்பால் நிர்வகிக்கப்படும் இந்த பாடசாலையில் தங்கியிருந்த நிலையில், மேட்படி தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்த கொடூர தாக்குதல்களில் பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டுத் திடலில் குழந்தைகள் உடல் சிதறி பலியாகிக் கிடந்த காட்சிகள் நெஞ்சை உலுக்கியுள்ளதாக பாலஸ்தீன அதிகாரி ஒருவர் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் படையினர் மேற்கண்ட நிவாரண முகாம் அமைந்துள்ள இந்த பகுதியில் பதுங்கியிருந்து, இஸ்ரேல் வீரர்கள் மீதான தாக்குதல்களை நடத்தி வந்ததாகவும், அவர்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் இஸ்ரேல் இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...