News3CR தமிழ்குரல் வானொலி பற்றிய அறிவித்தல்

3CR தமிழ்குரல் வானொலி பற்றிய அறிவித்தல்

-

இதுவரை காலம், 40 ஆண்டுகளிற்கு மேல் ஈழத் தமிழ் சங்கத்தின் (தற்போதய விக். தமிழ் சங்கம்) ஆதரவில் ஒலிபரப்பாகி வந்த மெல்பேர்னின் முதல் தமிழ் வானொலியான 3CR தமிழ்குரல் வானொலி July மாதம் 1ம் திகதி முதல் Tamil Media Melbourne அமைப்பின் கீழ் தொடர்ந்து அதன் சேவைகளை ஆஸ்ரேலியா வாழ் தமிழ் மக்களுக்கு வழங்கவுள்ளது என்பதை வானொலி குழாம் அறிவித்துள்ளது.

வானொலியில் உங்கள் அமைப்பு, கழகங்கள், சங்கங்கள் பற்றிய நிகழ்வுகளை அறியத்தர திரு சந்திரகுமார் அவர்களை 0428664533 எனும் இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

இத்தனை ஆண்டுகளாக இதனைக் கொண்டு நடாத்திய விக்டோரிய தமிழ் சங்கம், அறிவிப்பாளர்கள், தொண்டர்களுக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளைக் தெரிவிக்கும் இந்நேரத்தில், இதுவரையும் எம்மை அரவணைத்து ஆதரவளித்த நேயர்களையும், தொடரந்தும் உங்கள் அன்பையும், ஆதரவையும் வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

நன்றி 🙏

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...