மெல்போர்ன் டெரிமுட்டில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரசாயன வெடிப்பு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதால், அப்பகுதியை விட்டு விலகி இருக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த தீ விபத்தால், அப்பகுதிக்கு அருகே செல்லும் நெடுஞ்சாலையின் ஒருவழிப்பாதையும் மூடப்பட்டது.
இந்த தீ விபத்து குறித்து காலை 11.20 மணியளவில் அவசர சேவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் அவசர சேவைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அப்பகுதிக்கு வருவதை தவிர்க்க வேண்டும், புகையை சுவாசிக்காமல் இருக்க வீடுகளின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Albion, Braybrook, Brooklyn, Derrimut, Laverton North, Sunshine, Sunshine West, Tottenham மற்றும் Truganina ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தீ விபத்தால் எந்த காயமும் ஏற்படவில்லை, மேலும் கட்டிடத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக நம்பப்படுகிறது.