Cinemaமூடப்படுகிறதா கார்ட்டூன் நெட்வொர்க்?

மூடப்படுகிறதா கார்ட்டூன் நெட்வொர்க்?

-

Warner Bros-க்கு சொந்தமானது அமெரிக்க கேபள் தொலைக்காட்சி சேனலான தான் Cartoon Network.

அனைவரும் சிறுவயதில் Tom and Jerry, Scooby Doo, Power Girls, Johnny Bravo கார்ட்டூன்களை பார்த்து மகிழ்ந்திருப்போம். இதை அனைத்தும் தயாரித்து அனைவரும் மகிழ்ச்சிக்கு வழிவகையாக இருந்தது கார்ட்டூன் நென்வொர்க் சேனல் ஆகும்.

ஆனால் நாளடைவில் இதற்கு போட்டியாக பல தொலைக்காட்சி சேனல்கள் வந்தன. ஆனாலும் கார்ட்டூன் நெட்வொர்க்கின் உச்சம் குறையவில்லை.

2021 ஆம் ஆண்டு கோவிட் வந்த போது பல நிறுவனத்தில் இருந்து பணியிடை நீக்கம் நடந்தது. ஆனால் கோவிட் காலத்தில் எந்த ஒரு நட்டமும் இல்லாமல் இயங்கியது இந்த அனிமேஷன் துறை மட்டுமே ஆனால் பணத்தாசை பிடித்த முதலாளிகளுக்கு பலியாகும் விதமாக பல அனிமேஷன் நிபுணர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனால் அடுத்த சில ஆண்டுகளில் பல பிரபல அனிமேஷன் ஸ்டூடியோக்களில் இருந்து பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் பல டிசைனர்ஸ் ஒன்றிணைந்து ஒரு கார்ட்டூன் நெட்வொர்க்கை கிண்டல் செய்யும் விதமாக எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.

அதில் உங்களுக்கு பிடித்தமான கார்ட்டுன் நெட்வொர்க் சேனலின் பிடித்த ஷோவின் கிலிப்பை #ripcartoonnetwork என்று பதிவிடமாறு கூறியிருந்தனர்.

இதன் விளைவாக இந்த ஹேஷ்டாக் டிவிட்டரில் வைரலாகி, இன்று முழுவதும் டிரெண்டிங்கில் உள்ளது. இதனால் பலரும் கார்ட்டூன் நெட்வொர்க் நிறுவனம் மூடப்பட்டது என தவறான கண்ணோட்டத்தில் புரிந்துக்கொண்டனர்.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...