ஆஸ்திரேலியாவின் சிறந்த Sausage Roll தயாரிப்பாளருக்கான விருதை அடிலெய்டு பேக்கரி பெற்றுள்ளது.
அடிலெய்டின் தெற்கு புறநகர் பகுதியில் உள்ள பேக்கரியான Banana Boogie, ஆஸ்திரேலியாவின் சிறந்த sausage roll பிராண்டாக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முடிசூட்டப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் பேக்கிங் அசோசியேஷன் வருடாந்தம் ஏற்பாடு செய்துவரும் இந்தப் போட்டித் தொடரில், பனானா பூகி பேக்கரி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றமை விசேட அம்சமாகும்.
கடந்த போட்டியில் நடுவர் குழுவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் இம்முறை பரிசோதிக்கப்பட்டதாகவும் புதிய மாற்றங்களே இந்த வெற்றிக்கு வழிவகுத்ததாகவும் அதன் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
பனானா பூகி பேக்கரியின் சாசேஜ் ரோல் உள்ளூர் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளிடையேயும் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது.
		




