சீனாவின் குவாங்சி ஜுவாங் பகுதியில் உள்ள யூலின் என்ற இடத்தில் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த 3 வயது சிறுமிக்கு அவரின் தந்தை வித்தியாசமான முறையில் தண்டனைக் கொடுத்துள்ளார்.
தந்தையொருவர் இரவு உணவை தயார் செய்துவிட்டு தனது மகளை சாப்பாட்டு மேசைக்கு அழைத்துள்ளார். அப்போது தொலைக்காட்சி பார்ப்பதில் ஆர்வமாக இருந்த மகள் தந்தை அழைப்பதை கேளாமல் இருந்தால் இதனால் கோபமடைந்த தந்தை மகளை தண்டித்துள்ளார்.
அதாவது ஒரு கிண்ணத்தை கொடுத்து அந்தக் கிண்ணத்தை தனது மகளின் கண்ணீரால் நிரப்ப வேண்டும் எனவும் நிரம்பியவுடன் மீண்டும் தொலைக்காட்சி பார்க்கலாம் என்று கூறினார்.
மகளும் மேசையின் மீது கிண்ணத்தை வைத்து கண்ணீரால் நிரப்ப 10 நிமிடம் வரை போராடி களைத்து போய்விட்டார்.
குறித்த தந்தையின் இந்த செயல் காணொளியாக வெளியாகி பல்வேறு கோணங்களில் விமர்சித்து வருகின்றனர்.