உலகப் பணக்காரர்களில் ஒருவரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெற்றது.
இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த வருடம் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது ஒரு மாத காலமாக இவர்களின் திருமணம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சடங்குடன் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், இவர்களின் திருமணத்திற்கு தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் கலந்துக்கொண்டு தம்பதிகளை வாழ்த்தி வருகின்ற நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இவர்களின் திருமணத்திற்கு சென்று ஆடிபாடி கொண்டாடி இருக்கும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த காணொளியைப் பார்த்த இணையவாசிகள் தன் மகளின் திருமணத்தைக் கூட இவர் இவ்வாறு கொண்டாடியது இல்லை என கருத்து தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.