மெல்போர்னின் டோன்வால் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்தின் போது வீட்டினுள் இருந்த இருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வீட்டில் இன்று அதிகாலை 4 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த வீடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.