NewsOpen AI நிர்வாகக் குழு பொறுப்பிலிருந்து விலகிய Microsoft நிறுவனம்

Open AI நிர்வாகக் குழு பொறுப்பிலிருந்து விலகிய Microsoft நிறுவனம்

-

Chat GPT உள்ளிட்ட வலிமையான செயற்கை தொழில்நுட்ப தளங்களை உருவாக்கியுள்ள Open AI நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து Microsoft விலகியுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நிறுவனத்தில் ஏற்பட்ட நிர்வாக குழப்பங்களுக்கு பிறகு நிறுவனம் சாதகமான முன்னேற்றங்களை மேற்கொண்டுள்ளதாகவும் இன்னமும் தங்களின் பங்களிப்பு தேவையிருக்காது என Microsoft விலகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட இந்த கடித்தத்தில் Open AI நிறுவனத்தின் நிர்வாக குழுவில் தாங்கள் வகித்த பார்வையாளர் (Observer) என்கிற பொறுப்பிலிருந்து உடனடியாக விலகுவதாக Microsoft தெரிவித்துள்ளாது.

செய்யறிவு நிறுவனத்தின் தலைமையும் நிர்வாக குழுவும் தங்களின் இந்த முடிவுக்கு ஆதரவளித்ததை பாராட்டியுள்ள Microsoft, கடந்த 8 மாதங்களாக புதிதாக அமைக்கப்பட்ட நிர்வாக குழுவின் நடவடிக்கைகளை கவனித்து வருவதாகவும் நிறுவனம் செல்லும் பாதையில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் தங்களின் வரையறுக்கப்பட்ட பார்வையாளர் என்கிற பொறுப்புக்கு இனி அவசியமில்லை எனவும் மைக்ரோசொப்ட் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனின் நம்பிக்கையில்லா விசாரணைக்கு மத்தியில் இந்த விலகல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசொப்ட் 13 பில்லியன் அமெரிக்க டொலர் Open AI நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. மேல்மட்ட தொழில்நுட்ப நிறுவனங்களுடனான ஏ.ஐ. நிறுவனங்களின் கூட்டாண்மை (பார்ட்னர்ஷிப்) குறித்து ஐரோப்பிய யூனியன் ஆழமாக விசாரித்து வருகிறது. இது தொடர்பாக அமெரிக்க வர்த்தக ஆணையம், பிரிட்டன் போட்டி ஆணையம் அமைப்புகளும் ஆய்வு மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

நிர்வாக குழு மற்றும் நிறுவனத்தின் போக்கு குறித்து நம்பிக்கை கொண்டுள்ளதற்கு மைக்ரோசொப்ட் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்துள்ளது Open AI.

Open AI தனது முதலீட்டாளர்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களான மைக்ரோசொப்ட், ஆப்பிள், ட்ரைவ் கெப்பிடல், கோஸ்லா வென்சர்ஸ் ஆகியோருக்கு தொடர்ந்து தகவல்கள் அளிக்கும் அணுகுமுறை கையாளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Latest news

ஒபாமா – மிச்சல் தம்பதி விவாகரத்து என பரவிவரும் வதந்தி

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா - அவரது மனைவி மிச்சல் ஒபாமா இருவரும் விவாகாரத்துப் பெறப்போவதாக எழுந்தது உண்மையில்லை, என்று இருவரும் ஒன்றாக ஒரு...

Afterpay சேவையை வழங்க தயாராகவுள்ள Uber மற்றும் Uber Eats

வாடிக்கையாளர்கள் பாரம்பரிய கடன் வடிவங்களிலிருந்து விலகிச் செல்வதால், Uber மற்றும் Uber Eats ஆகியவை Afterpay-உடன் இணைந்து செயல்படுகின்றன. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள Uber மற்றும்...

ஆஸ்திரேலியாவில் உயர்ந்துள்ள வேலையின்மை விகிதம்

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தில் 4.3% ஆக உயர்ந்தது. ஜூன் மாதத்தில் 2,000 புதிய வேலைகள் மட்டுமே சேர்க்கப்பட்டதாக புள்ளிவிவர பணியகத் தரவு காட்டுகிறது. அதே...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள ஒரு கப் Coffee-யின் விலைகள்

ஆஸ்திரேலியாவில் ஒரு கப் Coffee-யின் விலை $8 வரை இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் சராசரியாக ஒரு கப் Coffee-யின் விலை $7...

ஆஸ்திரேலியாவில் உயர்ந்துள்ள வேலையின்மை விகிதம்

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தில் 4.3% ஆக உயர்ந்தது. ஜூன் மாதத்தில் 2,000 புதிய வேலைகள் மட்டுமே சேர்க்கப்பட்டதாக புள்ளிவிவர பணியகத் தரவு காட்டுகிறது. அதே...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள ஒரு கப் Coffee-யின் விலைகள்

ஆஸ்திரேலியாவில் ஒரு கப் Coffee-யின் விலை $8 வரை இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் சராசரியாக ஒரு கப் Coffee-யின் விலை $7...