இந்த வார இறுதியில் ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் பலத்த காற்று மற்றும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அண்டார்டிகாவுக்கு அருகில் இருந்து வரும் காற்றின் ஓட்டம் தென்கிழக்கு ஆஸ்திரேலியா முழுவதும் பரவும் என வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனால் டாஸ்மேனியா மாநிலம் அருகே கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த வாரம் வரை நீடிக்கும் என்று கணித்துள்ளது.
இதன் காரணமாக, டாஸ்மேனியா முதல் நியூ சவுத் வேல்ஸ் வரையிலான பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது மேலும் அடுத்த வாரத்தில் பல பகுதிகளில் வெப்பநிலை குறைய உள்ளது.
இன்று முதல் வரும் செவ்வாய்கிழமை வரை டாஸ்மேனியா, விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் ஆகிய மாநிலங்களில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் 90கிமீ/மணிக்கு அதிகமான பலத்த காற்று மற்றும் கனமழை தாஸ்மேனியா மற்றும் விக்டோரியாவை தொடர்ந்து பாதிக்கும்.
இந்த வார இறுதியில் வீசும் காற்றின் காரணமாக மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து விழும் அபாயம் உள்ளதால் அது குறித்தும் மக்கள் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.