Newsடிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு – வெளியான துப்பாக்கிதாரியின் விபரங்கள்

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு – வெளியான துப்பாக்கிதாரியின் விபரங்கள்

-

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டவர் தோமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக நியூயோர்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சந்தேக நபர் பென்சில்வேனியாவின் பெத்தேல் பூங்காவில் வசிப்பவர் என்றும், டொனால்ட் டிரம்ப் தனது பிரசார பேரணியை நடத்திய இடத்திலிருந்து 40 மைல் தெற்கே உள்ள பெத்தேல் போர்க் கிராமம் உள்ளது என்றும் குறித்த செய்தி சேவை கூறுகிறது.

டொனால்ட் ட்ரம்ப் நின்று கொண்டிருந்த மேடையில் இருந்து 130 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஒரு உற்பத்தி ஆலையின் மேற்கூரையில் இருந்து இந்த துப்பாக்கிதாரி சுட்டுள்ளார்.

இருப்பினும், ரகசிய சேவையின் ஸ்னைப்பர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார், அதைத் தொடர்ந்து தேடுதலின் போது, ​​அவரது உடலுக்கு அருகில் ஒரு ஏஆர் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.

பென்சில்வேனியாவின் பட்லரில் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மேடையில் பேசிக்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

உடனடியாக அப்பகுதியில் உள்ள உள்ளூர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று பின்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் பேரணியில் பங்கேற்ற ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் இருவர் காயமடைந்ததாகவும் அமெரிக்க ரகசிய புலனாய்வு சேவை (எஃப்பிஐ) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அத்தோடு அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...