Newsசனிக்கிழமை தோறும் இளைஞரைத் தேடி வந்து கொத்தும் பாம்பு - பீதியில்...

சனிக்கிழமை தோறும் இளைஞரைத் தேடி வந்து கொத்தும் பாம்பு – பீதியில் மக்கள்

-

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் பதேபூரைச் சேர்ந்த 24 வயதுடைய விகாஸ் துபே என்பவரை கடந்த 40 நாட்களில் 7 முறை பாம்பு கடித்துள்ளது. அதுவும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பாம்பு கடித்ததாகக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு முறையும் பாம்பு கடித்த போதெல்லாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்.

தொடர்ந்து சிகிச்சைக்காக நிறைய செலவு செய்ததால் விகாஸ் துபேவுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தை அணுகிய அவர், சிகிச்சைக்கு நிதியுதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த 3 மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமை மருத்துவ அதிகாரி ராஜீவ் நயன் கிரி கூறும்போது, “விகாஸ் துபே நிதியுதவி கேட்டு மாவட்ட ஆட்சியரை அணுகி உள்ளார். அரசு மருத்துவமனைக்கு சென்றால் இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என நான் ஆலோசனை வழங்கினேன். மேலும், அவரை பாம்புதான் கடித்ததா என்பதை ஆராய வேண்டிஉள்ளது. அத்துடன் பாம்பு கடித்ததும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஓரிருநாளில் குணமடைந்துள்ளார். எனவே, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் திறமை குறித்தும் ஆராய வேண்டி உள்ளது’’ என்றார்.

விகாஸை கடித்தது ஒரே பாம்பா அல்லது வெவ்வேறு பாம்புகளா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே, விகாஸ் ‘பாம்பு குத்தம்’ செய்து விட்டதால் அவரை பாம்பு கொல்லாமல் விடாது எனவும் அப்பகுதி மக்கள் அச்சுறுத்தத் தொடங்கிவிட்டனர்.

இதுபோன்ற மூட நம்பிக்கைகள் புதிதல்ல. கடந்த 1995-ல் அலிகரின் பிசோவோ கிராமத்தில் ஒரு விவசாயி உழவு இயந்திரம் ஓட்டிச் சென்றபோது, 2 பாம்புகள் மீது ஏற்றி கொன்று விட்டார். இதனால் பாம்புகள் படையெடுத்து வந்து ஊரையே பழிவாங்கப் போகிறது என பீதி கிளம்பியது.

இதையடுத்து, அப்பகுதியில் விளைந்த பயிர்களின் இலைகளில் பாம்பு தோல் போன்ற கோடுகள் தோன்றின. இறந்த பாம்புகளின் ஆவிதான் இலைகளில் கோடு போடுகின்றன என்றும் நாக பூஜை செய்து பரிகாரம் தேட வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதுபோல பூஜை செய்தனர். இதுகுறித்து ஆய்வு செய்த அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக தாவரவியல் துறை, இலைகள் மீது பரவியது ஒரு வகை வைரஸ் என கூறியபின் பீதி அடங்கியது.

அதேபோல் ஹாத்ரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பாம்புடன் காதல் ஏற்பட்டதாக ஒரு புரளி கிளம்பியது. அதனால் அந்தப் பாம்பு அடிக்கடி வந்து அந்தப்பெண்ணை அன்பாக கொத்திவிட்டு செல்வதாகவும், அதேநேரம் விஷம்கக்குவதில்லை எனவும் கூறினர். ஆனால் அது விஷமற்ற பாம்பு என்றும், அந்தப் பெண் பிரபலமாவதற்காக இப்படி செய்தார் என்றும் தெரியவந்தது.

இதுகுறித்து இந்து தமிழ் நாளேட்டிடம் வைல்ட்லைப் எஸ்.ஓ.எஸ் இணை நிறுவனர் கார்த்திக் சத்யநாராயணன் கூறும்போது, “பாம்புகளை வைத்து உ.பியின் மேற்கு பகுதியில் ஏராளமான கட்டுக்கதைகள் உண்டு. எனவே, தற்போது தொடங்கியுள்ள சிவனுக்கான ஸ்ரவண மாதத்தின் ஒவ்வொரு திங்கள்கிழமையும் பாம்புகளின் புனித நாள் என ஏமாற்றுவது வழக்கமாகிவிட்டது’’ என்றார்.

Latest news

மசாஜ் சலூனில் விசித்திரமாக நடந்து கொண்ட ஒருவர் பணிநீக்கம்

குயின்ஸ்லாந்தில் உள்ள பிரபலமான ஷாப்பிங் மால்களில் உள்ள மசாஜ் சென்டர்களில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது போலீசார் வழக்குப்...

போலி ரேபிஸ் தடுப்பூசிகள் பற்றி எச்சரிக்கை

Abhayrab எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியின் போலித் தொகுதிகள் நவம்பர் 1, 2023 முதல் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதை ஆஸ்திரேலிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (ATAGI) உறுதிப்படுத்தியுள்ளது. இந்த...

சட்டவிரோத குடியேறிகள் தானாக வெளியேறினால் சன்மானம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியேற்ற சட்டத்தை கடுமையாக்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்போரை வெளியேற்ற நுாதன...

Bondi பயங்கரவாதத் தாக்குதலின் நாயகர்களைத் தேடி சிறப்பு கௌரவ விருதுகள்

Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட மாவீரர்களுக்கு சிறப்பு மரியாதைகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அறிவித்தார். நேற்று காலை கான்பெராவில் ஊடகங்களுக்குப் பேசிய அல்பானீஸ், புதிய சிறப்பு...

சந்திரனில் அணு மின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ள ரஷ்யா

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சந்திரனில் அணு மின் நிலையமொன்றை நிறுவ திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த இலட்சியத் திட்டம், சந்திர விண்வெளித் திட்டத்திற்கும் சீனாவுடன்...

விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் கடைகள் திறக்கும் நேரம்

நீங்கள் பொருட்கள் வாங்க வேண்டிய இடங்கள், அடுத்த சில நாட்களில் திறந்திருக்கும் திகதிகள் மற்றும் நேரங்களை நாங்கள் உங்களுக்குத் தெரிவித்துள்ளோம். கிறிஸ்துமஸ் தினம், Boxing தினம் மற்றும்...