சிட்னி, மெல்போர்ன் மற்றும் கான்பரா ஆகிய நகரங்களுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காற்று, பனி மற்றும் மழையால் சேதம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டாஸ்மன் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, சிட்னி, மெல்போர்ன் மற்றும் கன்பரா ஆகிய பகுதிகளில் குளிர் காலநிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் வெப்பநிலை வீழ்ச்சியடைந்துள்ளதுடன் நாட்டின் சில பகுதிகளில் வழமையான பெறுமதியை விட 8 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தஸ்மேனியா, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா ஆகிய மாநிலங்களுக்கு இந்த வாரம் குளிர் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், மக்களை அவதானமாக இருக்குமாறும் அறிவித்துள்ளது.
ஏற்கனவே NSW ஆல்பைன்ஸ் முழுவதும் பனி பெய்து வருவதால், திங்கட்கிழமை பலத்த காற்றுடன் கடல் மட்டத்திலிருந்து 1900 மீட்டருக்கு மேல் வசிப்பவர்களுக்கு பனிப்புயல் ஏற்படும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.