பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழில் கட்சி சார்பில் போட்டியிட்ட உமா குமரன் ஸ்டராட்ஃபோர்ட் தொகுதியில் 19,145 வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றிப் பெற்றார்.
இந்நிலையில், கிழக்கு பிரிட்டனில் புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதியான ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவின் முதல் உறுப்பினராக நேற்று (16) பதவியேற்றுக்கொண்டார்.
உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட பின் அவர் தனது எக்ஸ் தளத்தில் “இன்று, நான் ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவின் முதல் எம்.பி.யாக பதவியேற்றுள்ளேன். எங்கள் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துவது எனது வாழ்க்கையின் பெருமை ஆகும்.
நான் கிழக்கு பிரிட்டனில் பிறந்தேன், கிழக்கு பிரிட்டன் மக்களுக்காக போராடுவேன். பாராளுமன்றில் நான் எப்போதும் உங்கள் குரலாக இருப்பேன்.” என்று பதிவிட்டுள்ளார்.