கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட 106 கிலோ போதைப்பொருள் கையிருப்பை இந்தோனேசிய பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த படகில் பிரிஸ்பேன் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது பனிக்கட்டி மருந்துகளின் சரக்கு கண்டுபிடிக்கப்பட்டதாக இந்தோனேசிய சுங்க முகவர்கள் தெரிவித்தனர்.
போதைப்பொருளை ஏற்றிச் சென்ற படகு சிங்கப்பூரில் இருந்து பிரிஸ்பேன் நோக்கி பயணித்த போது, இந்தோனேசிய கடற்பரப்பில் வைத்து இந்தோனேசிய சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தோனேசியா வழியாக கப்பலேறி ஜாவா தீவுகளில் இருந்து எரிபொருளை பெற்று இறுதியாக பிரிஸ்பேன் செல்வதே கடத்தல்காரர்களின் திட்டம் என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 50 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.