Newsஇன்ஸ்டாவில் கணவரை விவாகரத்து செய்தாக அறிவித்த டுபாய் இளவரசி

இன்ஸ்டாவில் கணவரை விவாகரத்து செய்தாக அறிவித்த டுபாய் இளவரசி

-

டுபாய் இளவரசி ஷேகா மஹ்ரா, தனது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூமை, இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் விவாகரத்து செய்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை ஜனாதிபதியும், பிரதமரும், டுபாய் ஆட்சியாளருமான முகமது பின் ரஷித் அல் மக்தூமின் மகளான ஹைகா மஹ்ரா, தனது இன்ஸ்டா பக்கத்தில், “அன்புள்ள கணவருக்கு, நீங்கள் வேறு சிலருடன் உறவில் இருப்பதால், உங்களை நான் விவாகரத்து செய்வதை இதன் மூலம் அறிவிக்கிறேன். நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முன்னாள் மனைவி.” என்று தெரிவித்துள்ளார்.

ஷைக்கா மஹ்ரா-வுக்கும், அவரது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூமுக்கும் கடந்த ஆண்டுதான் திருமணமானது. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்து இரண்டு மாதங்களே ஆகின்றன. இந்நிலையில், மஹ்ரா கணவரை விவாகரத்து செய்திருப்பது குறித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மஹ்ராவின் இந்த அறிவிப்பை அடுத்து பலரும் பல்வேறு கருத்துக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த அறிவிப்பை அடுத்து, இருவருமே தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதற்கு முன் பகிர்ந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கியுள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு, இளவரசி மஹ்ரா, இன்ஸ்டாகிராமில் ஒரு இரகசிய பகிர்வை வெளியிட்டிருந்தார்.

தனது குழந்தையை அரவணைத்தபடி இருக்கும் போட்டோவை பகிர்ந்த அவர், அதன் கீழ் “நாங்கள் இருவர் மட்டும்” என்று எழுதி இருந்தார். இதன்மூலம், மஹ்ரா தனது கணவரை விவாகரத்து செய்வது என்ற முடிவை ஏற்கனவே எடுத்துள்ளார் என்பதை உணர்த்துவதாக இருந்தது. இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் குறித்த தலைப்பில் பட்டம் பெற்றுள்ள மஹ்ரா, மேலும் முகமது பின் ரஷீத் அரசாங்க நிர்வாகத்தில் கல்லூரிப் பட்டமும் பெற்றுள்ளார்.

Latest news

டெலிகிராமிற்கு $1 மில்லியன் அபராதம் விதித்த ஆஸ்திரேலிய அரசாங்கம்

பயங்கரவாதம் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான தகவல்களைப் புகாரளிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்காக ஆஸ்திரேலியாவின் இணைய கண்காணிப்பு அமைப்பு டெலிகிராமிற்கு கிட்டத்தட்ட $1 மில்லியன்...

பெரும் ஆபத்தில் உள்ள கோல்ட் கோஸ்ட் மீனவர்கள்

கோல்ட் கோஸ்ட்டில் காளை சுறாக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் கடலோரப் பகுதிகளில் மீன் எண்ணிக்கை குறைந்து வருவதாக மீன்வள நிபுணர் லூக்...

$3 மில்லியன் லாட்டரி வெற்றியாளரைக் தேடும் Lotto

நியூ சவுத் வேல்ஸ் குடியிருப்பாளர் ஒருவர் சமீபத்திய லாட்டரி குலுக்கல்லில் $3 மில்லியன் பரிசை வென்றுள்ளார். இது பிப்ரவரி 22 சனிக்கிழமை நடைபெற்ற லாட்டரி குலுக்கல்லில் இருந்து...

வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்?

வரவிருக்கும் ஆஸ்திரேலிய கூட்டாட்சித் தேர்தல் தொடர்பான இரண்டு சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் 24ம் திகதி வெளியிடப்பட்டுள்ளன. Freshwater Strategic Poll மற்றும் Reslove Political Moniter ஆகியவற்றின்...