Newsஆஸ்திரேலிய தம்பதியை கொன்ற சந்தேக நபர் பற்றி வெளியான தகவல்

ஆஸ்திரேலிய தம்பதியை கொன்ற சந்தேக நபர் பற்றி வெளியான தகவல்

-

பிலிப்பைன்ஸில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அவுஸ்திரேலிய பிரஜைகளான தம்பதியரை கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் அந்த ஹோட்டலின் முன்னாள் ஊழியர் என தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் புதன்கிழமை ஹோட்டலின் துப்புரவு பணியாளர்களால் 57 மற்றும் 55 வயதுடைய திருமணமான ஜோடி மற்றும் 30 வயதான பிலிப்பைன்ஸ் பெண் ஆகியோரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த சடலங்களின் கை, கால்கள் கட்டப்பட்டு, கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் ஹோட்டல் அறையை விட்டு வெளியேறி மீண்டும் உள்ளே நுழையும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

சந்தேக நபர் ஹோட்டலில் குளத்தை சுத்தம் செய்பவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் முன்னாள் ஹோட்டல் ஊழியர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நபரின் சிசிடிவி காட்சிகளை அவதானித்த போது ஹோட்டலின் ஏனைய ஊழியர்களால் அவர் அடையாளம் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, தனது நகரில் நடந்த இந்த கொடூர குற்றத்திற்காக இறந்தவரின் உறவினர்கள் மற்றும் அவுஸ்திரேலிய சமூகத்திடம் மன்னிப்பு கேட்பதாக ஹோட்டல் அமைந்துள்ள நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...