அழிந்து வரும் மற்றும் அரிய வகை பறவைகளின் 3,404 முட்டைகள் ஹோபார்ட்டில் காவலில் வைக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத பறவை வர்த்தகம் தொடர்பாக மத்திய புலனாய்வுக் குழு மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இந்த முட்டைத் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அழிந்து வரும் பறவை இனங்களின் முட்டைகள் உட்பட பல பறவைகளின் முட்டைகளை சேகரித்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக டாஸ்மேனியா மாநிலத்தில் நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை, ஹோபார்ட் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கண்டுபிடிக்கப்பட்ட சில முட்டைகள் மிகவும் அரிதான மற்றும் அழிந்து வரும் பறவைகளின் முட்டைகள் என தெரியவந்துள்ளது.
பறவை முட்டைகளின் கையிருப்பு மதிப்பு சுமார் 500,000 டாலர்கள் என்று கூறப்படுகிறது.
சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு குற்றங்களின் கீழ் வரும் பறவை முட்டைகளின் வர்த்தகம் காரணமாக பல பறவை இனங்கள் அழியும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முட்டைகள் எந்தப் பறவையினத்தைச் சேர்ந்தவை என்பதை உறுதிப்படுத்த ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.