சுற்றுலாப் பயணிகளுக்கு உலகின் பாதுகாப்பான 10 நகரங்களில் ஆஸ்திரேலியாவின் இரண்டு நகரங்கள் பெயரிடப்பட்டுள்ளன.
ஃபோர்ப்ஸ் பத்திரிகையின்படி, சுற்றுலாப் பயணிகளுக்கு உலகின் பாதுகாப்பான நகரமாக சிங்கப்பூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் டோக்கியோ நகரம் 02வது இடத்துக்கும், கனடாவின் ரொறன்ரோ நகரம் 03வது இடத்துக்கும் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த தரவரிசையின்படி, சிட்னி நகரம் 4வது இடத்தையும், மெல்போர்ன் நகரம் 9வது இடத்தையும் எட்டியுள்ளன.
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரம் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும் வாழ்க்கைச் செலவு மற்றும் போக்குவரத்து வசதிகள் போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் இந்த தரவரிசை செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு, குற்றம், வன்முறை, பயங்கரவாத அச்சுறுத்தல்கள், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் பொருளாதார பலவீனம் தொடர்பான பல விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
உலகின் முதல் 10 பாதுகாப்பான சுற்றுலாத் தலங்களில் ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டும் ஒரே நாட்டைச் சேர்ந்த இரண்டு நகரங்கள் இடம் பெற்றிருப்பதும் சிறப்பம்சமாகும்.