Newsமுடங்கியது பங்களாதேஷ் - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

முடங்கியது பங்களாதேஷ் – அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

-

பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971ஆம் ஆண்டு நடந்த போரில் பங்கேற்ற பங்களாதேஷின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசாங்கம் வேலைவாய்ப்புக்களில் 30 சதவீதம் இட ஒதுக்கீடை வழங்கி வரும் நிலையில், நில ஒதுக்கீட்டில் பாரபட்சம் இருப்பதாகக் கூறி பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

இந்த போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சி மாணவர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர் இதில் 6 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இந்த போராட்டம் அதிகம் தீவிரமடைந்து டாக்காவில் உள்ள பிரிவி தொலைக்காட்சியின் தலைமைக் காரியாலயத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

இந்தப்போராட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. இந்த போராட்டம் காரணமாக, நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் காலவரையறையின்றி மூட உத்தரவிடப்பட்டுள்ளதுடன் இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...