2030 ஆம் ஆண்டு வரை சிட்னி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வீட்டு விலைகள் மலிவு விலையில் குறையாது என்று ஒரு புதிய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது.
அதன்படி 2030ஆம் ஆண்டு வரை சிட்னியில் உள்ள பெரும்பான்மையான மக்களால் மலிவு விலையில் வீடு என்ற கனவை அடைய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் (UNSW) மற்றும் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (UDS) இணைந்து நடத்திய புதிய ஆய்வின்படி இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
நகரின் ரியல் எஸ்டேட் சந்தை விலைப் பிரச்சனையால் பகுதி நேரத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் முழு நேரப் பணியாளர்களும் வீட்டுவசதி தொடர்பான நிதிப் பிரச்சனைகளால் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.