Brisbaneகாலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

-

மெல்பேர்ன், சிட்னி, பிரிஸ்பேன் மற்றும் பேர்த் ஆகிய நகரங்களில் இன்றும் (24) நாளையும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் அந்த பகுதிகளில் திடீர் மின் தடை கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெல்பேர்ன் மற்றும் ஹோபார்ட் பகுதிகளில் நாளை (25) மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இன்று மெல்பேர்னைச் சுற்றி காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 35 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

காற்றுடன் கூடிய காலநிலையில், மெல்பேர்னைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

பிரிஸ்பேனைச் சுற்றி மணிக்கு 15 முதல் 20 கிமீ வேகத்திலும், சிட்னியில் மணிக்கு 15 முதல் 25 கிமீ வேகத்திலும் காற்றின் வேகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...