NewsNSW-வில் சுறா தாக்குதலில் கரை ஒதுங்கிய Surfer-ன் கால்

NSW-வில் சுறா தாக்குதலில் கரை ஒதுங்கிய Surfer-ன் கால்

-

நியூ சவுத் வேல்ஸில் உள்ள போர்ட் மெக்குவாரியில், சுறா தாக்கியதால், Surfer ஒருவரின் கால் கடற்கரையில் கரை ஒதுங்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் தாக்குதலுக்கு உள்ளான 23 வயதான அலைச்சறுக்கு இளைஞனின் கால் விபத்து இடம்பெற்று சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் கடலோரத்தில் கரையொதுங்கியதாகவும், மீள் பொருத்துதலுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று காலை அவர் போர்ட் மெக்வாரியில் உள்ள நார்த் ஷோர் கடற்கரையில் சர்ஃபிங் செய்து கொண்டிருந்த போது பெரிய சுறா தாக்கியது.

சுறா விளையாட்டு வீரரை பின்தொடர்ந்து சென்று கடலுக்குள் இழுத்து செல்ல முயன்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த கடற்கரையில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் தாக்குதலையும் பொருட்படுத்தாமல் அவர் சிரமப்பட்டு கரைக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

விபத்தை கண்டதும் அருகில் கூடியிருந்தவர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அலைகளால் கரை ஒதுங்கிய பாதம் ஐஸ் கட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சர்ஃபர் சமீபத்தில் கழுத்தில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு சர்ஃபிங்கிற்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவின் தனிநபர் கடன் துறை பற்றி எச்சரிக்கை

ஆஸ்திரேலிய பத்திரங்கள் மற்றும் முதலீட்டு ஆணையம் (ASIC), ஆஸ்திரேலியாவின் வேகமாக வளர்ந்து வரும் தனிநபர் கடன் துறையை உன்னிப்பாகக் கவனித்துள்ளது. 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள தனியார்...

குழந்தைகளுக்கு இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் கோவிட்-19 தடுப்பூசி

COVID-19 வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு இதய நோய் வருவதைத் தடுப்பதற்குப் பதிலாக, அவர்களின் இதய நோய் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கின்றன என்று ஒரு புதிய...

McDonald’s ஊழியர்கள் இப்போது கல்லூரி கிரெடிட்களையும் பெறலாம்!

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s, ஊழியர்கள் தங்கள் வேலைத் திறன்களைப் பயன்படுத்தி பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெறுவதற்கான ஒரு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் 20,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் micro-credentials...

செயலிழப்பிற்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்ட Optus சேவைகள்

நியூ சவுத் வேல்ஸின் Hunter பகுதியில் ஏற்பட்ட மின் தடைகளுக்குப் பிறகு சேவைகள் மீட்டமைக்கப்பட்டுள்ளதாக Optus கூறுகிறது. Hexham – Maitland சாலையில் உள்ள ஒரு மொபைல்...

செயலிழப்பிற்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்ட Optus சேவைகள்

நியூ சவுத் வேல்ஸின் Hunter பகுதியில் ஏற்பட்ட மின் தடைகளுக்குப் பிறகு சேவைகள் மீட்டமைக்கப்பட்டுள்ளதாக Optus கூறுகிறது. Hexham – Maitland சாலையில் உள்ள ஒரு மொபைல்...