தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்த காதலனை கௌரவிக்கும் முகமாக இறந்து போன காதலனை திருமணம் செய்ய அப்பெண் முடிவெடுத்துள்ளார்.
தாய்வான் மற்றும் சீனாவில் இறந்தவர்கள் திருமணம் செய்துக் கொள்வது 3000 ஆண்டுகளாகவே வழக்கத்தில் உள்ள பாரம்பரியமாகும்.
திருமணம் நடக்காமல் உயிரிழப்பவர்கள் அவர்களின் இறப்புக்கு பின் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க முடியாது என நம்பப்படுவதால் இத்தகைய நடைமுறை இருந்ததாக சொல்லப்படுகிறது.
இத்தகைய திருமணங்களில் ஆணோ, பெண்ணோ ஒருவர் உயிரோடு இருக்க இறந்தவரின் புகைப்படம் அவர்கள் அணிந்திருந்த உடைகள் மற்றும் பிற கலைப்பொருள்களை கொண்டு பாரம்பரிய திருமண சடங்குகள் நடத்தப்படுகின்றன.