2024 ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா தொடங்கிய போது, பிரான்சில் பல ரயில் பாதைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரிஸில் இருந்து மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு நோக்கிச் செல்லும் TGV அதிவேக ரயில் பாதையில் தீ வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் சுமார் 800,000 ரயில் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
வார இறுதியில் பழுதுபார்க்கும் வரை பல சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்படும்.
அதிக எண்ணிக்கையிலான ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளதால் அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளதால் அனைத்து பயணிகளும் தங்கள் பயணங்களை ஒத்திவைக்குமாறு பிரான்ஸ் ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ரயில்வே நிறுவனமான SNCF கூறுகையில், இது தனது ரயில் வலையமைப்பை சீர்குலைக்கும் நோக்கில் நடத்தப்பட்ட பாரிய தாக்குதல்.
இந்த தீய செயலுக்கு பிரான்ஸ் போக்குவரத்து அமைச்சரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.