தற்போதைய தொழிற்கட்சி அரசாங்கத்தின் கீழ், அவுஸ்திரேலியாவிற்கு 383 குடியேற்றவாசிகள் அனுமதியின்றி வருகை தந்துள்ளதாக உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் பேட்டர்சன் தெரிவித்துள்ளார்.
படகு மூலம் வரும் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை தற்போதைய அரசாங்க வேலைத்திட்டத்தின் தோல்வி என அமைச்சர் கூறுகிறார்.
பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையில் தொழிற்கட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் 19 புலம்பெயர்ந்த படகுகளில் இருந்து 383 பேர் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அவுஸ்திரேலியாவிற்கு வரும் சட்டவிரோத படகுகளுக்கு எதிராக புலம்பெயர்ந்தோரை அடக்கும் நடவடிக்கைகள் வெற்றியளிப்பதாக இல்லை எனவும் ஜேம்ஸ் பேட்டர்சன் தெரிவித்துள்ளார்.
இது அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையின் தோல்வி என தாம் நம்புவதாக நிழல் அமைச்சரவையின் உள்துறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வான் கண்காணிப்பு அல்லது கடல் ரோந்துகளை வழங்குவதில் அரசாங்கம் தொடர்ந்து தவறியதைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற சூழ்நிலைகள் உருவாகுவதில் ஆச்சரியமில்லை என்றும் அவர் கூறினார்.