ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி மற்றும் துணை கேப்டன் தஹ்லியா மெக்ராத் ஆகியோர் வரலாற்று சிறப்புமிக்க காம்பேங்க் மகளிர் ஆஷஸ் பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்காக மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை (எம்சிஜி) ஒளிரச் செய்தனர்.
ஜனவரி 30 முதல் பிப்ரவரி 2, 2025 வரை, ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை விளையாடுகின்றன.
1934 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியான வரலாற்றில் முதல் பெண்கள் டெஸ்ட் போட்டியின் 90 ஆவது ஆண்டு நிறைவுடன் இந்த போட்டி இடம்பெறவுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டன் அலிசா ஹீலி, மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
முதலாவது மகளிர் டெஸ்ட் தொடரின் 90 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெறவுள்ள இந்த விசேட போட்டியானது சிறப்பான நிகழ்வாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற மெல்போர்ன் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தப் போட்டிக்கு ஆதரவு அளித்த விக்டோரியா அரசுக்கும் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்பிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாகி நிக் ஹாக்லி தெரிவித்தார்.