MelbourneBeaconsfield நீர்த்தேக்கத்தை காப்பாற்ற ஒரு மனு

Beaconsfield நீர்த்தேக்கத்தை காப்பாற்ற ஒரு மனு

-

Melbourne Water Beaconsfield நீர்த்தேக்கத்தை வடிகட்டவும், வரலாற்று சிறப்புமிக்க அணையை இடித்து அப்பகுதியை பொதுமக்கள் பார்வையில் இருந்து மூடவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், Beaconsfield குடியிருப்பாளர்கள் 1,600 பேர் கொண்ட குழு Save the Beaconsfield Reservoir Action Group என்ற அமைப்பை உருவாக்கி, சம்பந்தப்பட்ட திட்டத்தை செயல்படுத்துவதைத் தடுக்கக் கோரி இந்த நாட்களில் மின் மனுவில் கையெழுத்திடத் தொடங்கியுள்ளனர்.

வருங்கால சந்ததியினருக்காக இந்த வரலாற்று நீர்த்தேக்கத்தையும், அணையையும் பாதுகாத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்த குழுவின் தலைவர் Harry Jensen சமீபத்தில் Shawn Mendis வழக்கறிஞர்களை சந்தித்து இதற்கு தேவையான சட்ட உதவியை கோரியதோடு, தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் வழங்க அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதற்காக உள்ளூர் தலைவர்களும் இணைந்துள்ளதுடன், Brad Battin MP மற்றும் Dr Renee Heath MP ஆகியோரால் இரண்டு மனுக்கள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Beaconsfield நீர்த்தேக்கத்தை காப்பாற்றுவதற்காக Beaconsfieldக்கு அருகில் உள்ள அனைவரையும் பின்வரும் மின் மனுவில் கையொப்பமிடுமாறு Save the Beaconsfield Reservoir Action Group கேட்டுக்கொள்கிறது.

E- Petition – Public access to Beaconsfield Reservoir (parliament.vic.gov.au)

Latest news

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...

ஆஸ்திரேலிய தினத்தை தன்னார்வ விடுமுறையாக மாற்றுவதற்கு எதிராக போராட்டம்

ஆஸ்திரேலிய தினத்தை பொது விடுமுறை நாளாக மாற்றுவது தவறு என்று பெரும்பாலான இளம் ஆஸ்திரேலியர்கள் நம்புவதாக புதிய கருத்துக் கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. பழமைவாத சிந்தனைக் குழுவான...

அமெரிக்க அவசர சேவைகளுக்கு போலி அழைப்புகளை செய்த ஆஸ்திரேலிய நபர்

அமெரிக்காவில் பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறி, நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் அவசர சேவைகளுக்கு போலி...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் புகை மூட்டம் காரணமாக விமானங்கள் தாமதம்

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் இன்று காலை அவசர தீ எச்சரிக்கை ஒலித்ததால் விமானப் பயணங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று காலை 8...

கொசுக்களால் பரவும் மூளை வைரஸ் பற்றி எச்சரிக்கை

தெற்கு NSW இல் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் (JE) குழுவைச் சேர்ந்த ஒரு அரிய, தீவிர மூளை வைரஸ் பரவும் அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கொசுக்களால் பரவும் இந்த...