விக்டோரியா மாநில காவல்துறை மெல்போர்ன் உட்பட பல பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலை இலக்காகக் கொண்ட நடவடிக்கைகளில் கிட்டத்தட்ட 350 பேரை கைது செய்துள்ளது.
இந்த நடவடிக்கைகளின் போது 1.5 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப்பொருள் கையிருப்பும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரபலமான சுற்றுலாப் பகுதிகளான போர்ட் பிலிப் மற்றும் செயின்ட் கில்டாவில், கடந்த ஆண்டில் சராசரியாக நாளொன்றுக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் அவர்கள் மீது சுமார் 650 போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இங்கு சுமார் 6 இலட்சம் டொலர் பெறுமதியான கொக்கைன், 5 இலட்சம் டொலர் பெறுமதியான கஞ்சா, 4 இலட்சம் டொலர் பெறுமதியான ஐஸ் மற்றும் ஏனைய போதைப்பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போர்ட் பிலிப் மற்றும் செயின்ட் கில்டாவின் பிரபலமான சுற்றுலாப் பகுதிகளில் உள்ள அனைவரும் பயணிக்கவும், வேடிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக காவல்துறை வலியுறுத்தியது.