2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கவனம் ஈர்த்த இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட இளம்பெண் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
தீனா முரளிதரன் (Thinaah Muralitharan) மற்றும் பியர்லி டேன் (Pearly Tan) என்னும் இருவரைக் கொண்ட மலேசிய அணி, 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் வரலாறு படைத்தது.
ஒலிம்பிக்கில், பெண்கள் இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் மலேசிய அணி தீனா, பியர்லி அணிதான்.
நேற்று அரையிறுதிப் போட்டியில் சீனாவின் Chen Qing Chen, Jia Yi Fan இணையை எதிர்கொண்டது தீனா, பியர்லி அணி.
ஆனால், 12-21, 21-18, 15-21 என்ற கணக்கில் தீனா, பியர்லி அணி தோல்வியடைந்ததால், இறுதிப்போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கைநழுவியது.
முக்கியமான விடயம் என்னவென்றால், தீனா, பியர்லி அணி உலகின் No 12ஆவது இடத்தில் உள்ளவர்கள். அவர்களை எதிர்த்து போட்டியிட்ட சீன அணி உலகில் No1 இடத்தில் இருப்பவர்கள்.
ஆக, தோல்வியடைந்தாலும், உலகின் No 1அணியிடம் மோதி, போராடித்தான் தீனா, பியர்லி அணி தோல்வியை சந்தித்துள்ளது என்பதால், அதுவும் ஒரு கௌரவமே.
இன்னொரு நல்ல விடயம் என்னவென்றால், இன்றைய போட்டியில் வெண்கலம் வெல்லும் ஒரு வாய்ப்பு தீனா, பியர்லி அணிக்கு உள்ளது என்பதுதான்.