News15 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்துள்ள இன்டெல் நிறுவனம்

15 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்துள்ள இன்டெல் நிறுவனம்

-

இன்டெல் நிறுவனம் தொழில்நுட்பத் துறையின் சிப் உற்பத்தியில் தனது போட்டியாளர்களான NVIDIA மற்றும் AMD உள்ளிட்டவைகளுடனான போட்டியை பலப்படுத்தும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

உலகம் முழுவதும் தங்களது அலவலகங்களில் பணியாற்றி வருவோரில் 15 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்வதாக இன்டெல் அறிவித்து இருக்கிறது. பணிநீக்க நடவடிக்கை காரணமாக இன்டெல் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்களில் 15 ஆயிரம் பேர் வேலையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மெமோ அனுப்பியுள்ளது. இதனை இன்டெல் கார்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பேட் கெல்சிங்கர் அனுப்பியுள்ளார். இந்த நடவடிக்கை மூலம் இன்டெல் நிறுவனம் அடுத்த ஆண்டு 10 பில்லியன் டொலர்களை சேமிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

பணி நீக்கம் தவிர்த்து நிறுவனத்தின் நிர்வாக பணிகளை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. எதிர்பார்த்த வருவாய் இல்லாதது, ஏ.ஐ துறையில் முழுமையான பலன்களை அடையாமல் இருப்பது, செலவீனங்கள் அதிகளவில் இருப்பது உள்ளிட்டவை இன்டெல் பணிநீக்க நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

.

Latest news

விக்டோரியாவில் தீ விபத்தில் நாசமான பிரபலமான ஹோட்டல்

விக்டோரியாவில் உள்ள பிரபலமான ஹோட்டலான Churchill ஹோட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து முற்றிலுமாக நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக நகரம் முழுவதும் அதிக...

பாகிஸ்தான் சென்று திரும்பியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தட்டம்மை எச்சரிக்கை

விக்டோரியாவில் ஆபத்தான தட்டம்மை வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்குச் சென்று திரும்பிய பயணி ஒருவருக்கு விக்டோரியா ஹெல்த் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. மெல்பேர்ண் நகரத்தில்...

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை மறுக்கும் பிரபல ஆஸ்திரேலிய பத்திரிகையாளர்

பிரபல ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் Alan Jones மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது . பத்திரிகையாளருக்கு எதிரான ஆதாரங்களில் சில குற்றச்சாட்டுகளில் முரண்பாடான அறிக்கைகள்...

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை மறுக்கும் பிரபல ஆஸ்திரேலிய பத்திரிகையாளர்

பிரபல ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் Alan Jones மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது . பத்திரிகையாளருக்கு எதிரான ஆதாரங்களில் சில குற்றச்சாட்டுகளில் முரண்பாடான அறிக்கைகள்...